பெங்களூரு

காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ஆட்சியைமைக்க உரிமை கோரியதாகவும் முடிவு ஆளுநர் கையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள்னர்.

கர்நாடகாவில் கடந்த 12 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.   இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.   அதை ஒட்டி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.    முன்னாள் பிரதமர் தேவே கௌடா மகன் முதல்வராக காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது.

ஆளுநர் மளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்கிரசின் ஆதரவு கடிதத்தை குமாரசாமி அளித்துள்ளார்.   அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் பரமேஸ்வராவுடன் செய்தியாளர்களை குமாரசாமி சந்தித்தார்.  சந்திப்பின் போது தலைவர்கள், “காங்கிரசின் ஆதரவு கடித்தத்துடன் குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார்.  இது குறித்து இனி முடிவடுப்பது ஆளுநர் கையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.