காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் : சரத் பவார்

மும்பை

தேசியவாத காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என சரத் பவார் அறிவித்துள்ளார்.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சியுடன் சரத் பவார் தலைமையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருந்தது.  இரு கட்சிகளும் இணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இட்டன.   அதன் பிறகு நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் தனித்தனியே போட்டி இட்டன.

தற்போது இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தின.  அதை ஒட்டி சரத் பவார், “நானும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து மூன்று சந்திப்புகளில் விவாதித்துள்ளோம்.  தற்போது இரு கட்சிகளும் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்த்ல் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்

இன்னும் ஒரு வாரத்தில் இரு கட்சிகளுக்கிடையில் தொகுதி உடன்பாடு ஏற்பட உள்ளது.   மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கப் போவதில்லை இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக மட்டுமே முடிவு எடுத்துள்ளோம்.  தேர்தல் முடிந்த பின் முதல்வர் பதவி குறித்து முடிவெடுக்க உள்ளோம்.

தற்போது பாஜக சிவசேனா ஆகிய கட்சிகளுக்கிடையில் கூட்டணி முறிந்துள்ளது.  அவர்கள் மேலும் சண்டை இட்டுக் கொள்வார்களா அல்லது தேர்தல் நேரத்தில் இணவார்களா என்பதை இப்போது கூற முடியாது.  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.