லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில்  சமாஜ்வாதி கட்சி  மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி உடன்பாட்டின் படி, சமாஜ்வாதி கட்சி 298 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 105 இடங்களிலும் போட்டியிடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் செய்தியாளர் சந்திப்பின் போது, அக்கட்சியைச் சேர்ந்த நரேஷ் உத்தம் இதனை கூறியுள்ளார். சமாஜ்வாதி – காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்றும் ஏழைகளில் நிலை உயரவும் மாநிலம்  வளர்ச்சி அடையவும் இக்கூட்டணி பாடுபடும் என்று  காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாபர் தெரிவித்துள்ளார்.