சாவால், மிசோரம்

மிசோரம் மாநில எதிர்க்கட்சியான சரம் மக்கள் முன்னணி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி எல் ரவுலா உள்ளார். கடந்த மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் சரம் மக்கள் முன்னணி க்ட்சி தலைவர் லால்துஹோமா இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஐசாவால் மேற்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.  அந்த தொகுதி காலியாக உள்ளது.

தேர்தல் ஆணையம் மிசோரம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைதேர்தல் ஒன்றாக நடைபெறும் என அறிவித்துள்ளது. தற்போது சரம் மக்கள் முன்னணி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இந்த இரு தேர்தல்களுக்கும் கூட்டணி அமைத்துள்ளன. மக்களவை தொகுதிக்கு காங்கிரசும் சட்டப்பேரவை தொகுதிக்கு சரம் மக்கள் முன்னணியும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

காங்கிரசின் தற்போதைய மக்களவை உறுப்பினர் ரவுலாவுக்கு  87 வயதாவதால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளார். ஆகவே வேறு ஒருவரை காங்கிரஸ் வேட்பாளராக்க உள்ளது. தற்போது மிசோரம் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 உறுப்பினர்களில் காங்கிரசுக்கு 5 உறுப்பினர்களும் சரம் மக்கள் முன்னணிக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர்.