நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் குழுக்கள் அறிவிப்பு…முழு விபரம்

டில்லி:

நாடாளுமன்ற தேர்தலுக்கான மைய குழு, தேர்தல் அறிக்கை குழு, விளம்பர குழுக்களை காங்கிரஸ கட்சி அமைத்துள்ளது.

நாடாளுன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

 

இந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 9 பேர் கொண்ட மைய குழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு, 13 பேர் கொண்ட விளம்பர குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அறிவித்துள்ளார்.

மூத்த தலைவர்கள் ஏ.கே.ஆண்டனி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜிவாலா, கே.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட மைய குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சல்மான் குர்ஷித், சசி தரூர் உள்பட 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவும், 13 பேர் கொண்ட விளம்பர குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.