மக்களவை தேர்தல் : டில்லி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல்

டில்லி

டில்லியின் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிஹ்த்துள்ளது.

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என பல அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து வந்தனர். கூட்டணி குறித்த முடிவு எட்டப்படாததால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தனர்.

தற்போது இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி இல்லை என்பது தெளிவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி டில்லி மக்களவையின் ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது.

சாந்தினி சவுக் – ஜே பி அகர்வால்

வடகிழக்கு டில்லி ஷீலா தீட்சித்

கிழக்கு டில்லி – அர்விந்தர் சிங் லவ்லி

புது டில்லி – அஜய் மாகன்

வடமேற்கு டில்லி -ராஜேஷ் லிலோத்தியா

மேற்கு டில்லி – மகாபால் மிஸ்ரா

ஆகியோர் போட்டி இட உள்ளனர்.