டில்லி:

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில்,  மோடியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துஉள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தியை  பொதுவேட்பாளராக  களமிறக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்த நிலையில், தற்போது வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29ந்தேதி கடைசி நாள். அங்கு மே மாதம் 19ந்தேதி நடைபெற உள்ள கடைசி கட்ட (7வது கட்ட)  தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி, மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல கோரக்பூர் தொகுதிக்கு மதுசூதன் திவாரி போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

வாரணாசியில் ஏற்கனவே மோடியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதுபோல ஏராளமான விவசாயிகளும் மோடிக்கு எதிராக திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.