அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

வரும் ஏப்ரல் மாதம் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகி உள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மற்றும் அஞ்சலிக் ஞான மோர்ச்சா ஆகிய ஐந்து கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன.

கவுகாத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 6 கட்சி தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அசாம் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்களான சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது பேட்டி அளித்த அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபன் போரா “பா.ஜ.க. அரசை வீழ்த்த ஆறு கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளுக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன” என தெரிவித்தார்.

– பா. பாரதி