போபால்:
ரடங்கு காரணமாக மத்தியப் பிரதேச தலைநகரில் சிக்கிக்கொண்ட வயநாடு மற்றும் கேரளாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொதியாக இருப்பது வயநாடு. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு தங்கள் சொந்த ஊர் திரும்ப உதவுமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து ராகுல் காந்தி மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தை தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டு கொண்டார். அவரும் உடனடியாக மத்திய பிரதேசத்தில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் வீடு திரும்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய மத்திய பிரதேச காங்கிரஸ் ஊடக செல் பொறுப்பாளர் ஜீது பட்வாரி, வயநாடு உள்ளிட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு இதுபோன்ற ஒரு பஸ் கடந்த சனிக்கிழமை காலை கேரளாவுக்கு புறப்பட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தென் மாநிலத்திலிருந்து சிக்கித் தவிக்கும் மாணவர்கள் குறித்த அறிவுறுத்தல்களும் தகவல்களும் கிடைத்தவுடன் கட்சி பேருந்துகளை அனுப்பி வருகிறது என்றும் அவர் கூறினார்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த போபாலில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கும் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பட்வாரி கூறினார்.

அண்மையில், பாஜக ஆளும் வடக்கு மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக காங்கிரசும் உத்தரபிரதேச அரசும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தகது.