த்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பா.ஜ.க.கூட்டணியில் இருந்தும் அகாலிதளம் விலகலாம் என கூறப்படும் நிலையில், பா.ஜ,க,வின் எஞ்சிய கூட்டணி கட்சிகளுக்கு சிக்கலை உருவாக்கும் வகையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா,’’ விவசாயிகளுக்கு எதிராக ஆளும் பா.ஜ.க.கொண்டு வந்துள்ள மசோதா மீது அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தங்கள் நிலையை தெளிவு படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

‘’ அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற பா.ஜ.க.வின் தோழமை கட்சிகள், தாங்கள் யார் பக்கம் உள்ளன என்பதை உடனடியாக முடிவு செய்ய வேண்டும் ‘’ என்று குறிப்பிட்ட சுர்ஜிவாலா’’ நீங்கள் ( அ.தி.மு.க. போன்ற கூட்டணி கட்சிகள்) விவசாயிகள் பக்கம் நிற்கிறீர்களா? அல்லது விவசாயிகள் நலனை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அதிகாரத்தை அனுபவிக்க ஆசைப்படுகிறீர்களா?’’ என வினா எழுப்பினார்.

அ.தி.மு.க.உள்ளிட்ட பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளுக்கு, காங்கிரஸ் கட்சியின் இந்த கேள்வி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.