மகாராஷ்டிர சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் போட்டியின்ற் தேர்வு

மும்பை

காராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா  பட்டோல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக இருந்தாலும் மற்ற மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்ததால்  பாஜக பலவற்றில் ஒதுங்கி உள்ளது.   மாநிலத்தில் முதல்வர் பதவி ஏற்ற தேவேந்திர பட்நாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதால் பட்நாவிஸ் பதவி விலகினார்.

அடுத்து பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.   ஆனால் அந்த விவாதத்தில் கலந்துக் கொண்ட பாஜக உறுப்பினர்கள் அதன் பிறகு அவையை விட்டு வெளிநடப்பு செய்து வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.   இந்த வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 169 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

அடுத்ததாகச் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்குக் காங்கிரஸ் உறுப்பினர் நானா பட்டோல் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.  அவரை எதிர்த்து பாஜக சார்பில் கிஷோன் கதோர் சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.   இந்த தேர்தலிலும் இறுதி நேரத்தில் பாஜக வேட்பாளர் கிஷோன் காதர் போட்டியில் இருந்து விலகினார்.  அதையொட்டி நானா பட்டோல் போட்டியின்றி சபாநாயகராகத் தேர்வாகி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி