மோடிதான் அப்படி! ஆனா பாஜக இரண்டாம்கட்ட தலைவர்கள் இப்படி!

ன்று நடைபெற்ற காங்., முதல்வர்கள் பதவியேற்பு விழாவில், பா.ஜ, கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்து ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெற்ற ராஜஸ்தான், ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் முதல்வர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றனர். இந்த விழாவில் காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் காங்கிரசிடம் ஆட்சியை இழந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, பா.ஜ.,வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். வசுந்தரா ராஜேவும், ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் ஜிதின் பிரசாத்தும் அருகருகே அமர்ந்து இயல்பாக உரையாடினர்.

இதே போல  ம.பி.,யிலும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு, முதல்வராக பதவியேற்ற கமல்நாத்திற்கு வாழ்த்துக்களைக் கூறினார்.

பொதுவாக டில்லியில் மட்டுமே  எதிரெதிர் கட்சித்  தலைவர்கள் இயல்பாக பேசிக்கொள்வது நடக்கும்.  ஆனால் கடந்த 13ம் தேதி நடந்த “நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தின அஞ்சலியில்” கலந்துகொண்ட ராகுலை மோடி புறக்கணித்தார். இது பல ஊடகங்களில் செய்தியாக வந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்கும் நிகழ்சிகளில் பா.ஜ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்துகொண்டிருப்பது நல்ல திருப்பம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.