காங்கிரஸ் புகார் எதிரொலி: சத்திஸ்கர் மாநில தகவல் தொடர்பு ஆணையாளர் மாற்றம்

ராய்ப்பூர்:

த்திஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி யினரின் புகார் காரணமாக, மாநில பொது தகவல் தொடர்பு ஆணையாளரை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிககை எடுத்துள்ளது.

மாவோயிஸ்ட்டுகளின் தாக்கம் அதிகம் உள்ள சத்திஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுஉள்ளது.  ஆனால், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு மாவோ யிஸ்டுகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

90 சட்டமன்ற தொகுதிகளை சத்திஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 12ம் தேதி நடைபெற்றுள்ள நிலையில், 2வது கட்ட தேர்தல் வரும் 20ந்தேதியும் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில்  மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி, சத்தீஸ்கரின் முதற்கட்ட தேர்தலில் 76 சதவிகித வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாநில தகவல் தொடர்பு ஆணையாளர் மாற்றப்பட்டுள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அங்கு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு டிரம் வாசித்து பாஜகவினரை உற்சாகப்படுத்தினார்.  இந்த நிலையில் தகவல் தொடர்பு ஆணையாளர் மாற்றப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் தகவல் தொடர்பு ஆணையாளராக இருந்து வந்த ராஜேஷ் தாக்கூர் தொப்போ (Rajesh Sukumar Toppo) அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர்மீது காங்கிரஸ் கட்சி புகார் கூறியதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கமிஷனர் ராஜேஷ் தாக்கூரின் நடவடிக்கை குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் தேவகான் என்பவர் தேர்தல் ஆணையத்தில் வீடியோ ஆதாரம் மூலம் புகார் கூறியதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரை அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

ராஜேஷ் தாக்கூர் தொப்போ 2004ம் ஆண்டு ஐஏஎஸ் கேடரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.