போபால்

ற்போதைய ஊரடங்கு நேரத்தில் பெட்ரோ அற்றும் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு பணம் பார்த்து வருவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை மாற்றிக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  தற்போது கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.  ஆயினும் கடந்த 18 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

இதற்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஊரடங்கு நேரத்தில் பலருக்கு ஊதிய இழப்பு நேர்ந்துள்ள நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது.   இந்த விலை உயரவை எதிர்த்து மத்திய பிரதேச தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் திக்விஜய் சிங் சைக்கிள் பேரணி ஒன்றை நடத்தினார்.

இந்த பேரணி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இல்லத்தில்  இருந்து தொடங்கப்பட்டது.  பேரணி முடிவில் செய்தியாளர்களிடம் திக்விஜய் சிங், “கொரோனா நோயால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.  நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளது.   பலர் பசி  பட்டினியால்  உயிர் இழக்கின்றனர்.

ஆனால் பிரதமர் மோடி பேரிடர் காலம் ஒரு நல்ல வாய்ப்பு எனக் கூறி உள்ளார்.

தொடர்ந்து 18 நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.  ஆம் மோடிஜி சொல்வதைப் போல் இது அவர்களுக்கு நல்ல வாய்ப்புதான்.  கொரோனா பேரிடர் காலத்தில் பெட்ரோல் டீசல் விலைஅயி உயர்த்தி பணம்.பார்க்க அரசுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது“ எனத் தெரிவித்தார்.