பாமர மக்களின் பாக்கெட்டை சுரண்டும் பாஜக : காங்கிரஸ் குற்றசாட்டு

டில்லி

பாமர மக்களின் கடும் உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தை தட்டிப்பறிப்பதே பாஜக அரசின் கொள்கையாக உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடு கிடு என உயரத் தொடங்கியது.   இதனால் பல பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகரித்தது.   விலைவாசிகள் ஏறத் தொடங்கின.   இந்நிலையில் வாகன எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.  இதனால் மக்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ரண்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பக்கத்தில், “முதலில் பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களாக தினமும் உயர்த்தி பாமர மக்களின் பைகளை ஓட்டை இட்டு அவர்களின் பணத்தை திருடியது.. தற்போது வாகன எரிவாயு விலை உயர்வின் மூலம் பைகளில் உள்ள மிச்சம் மீதி சில்லறைகளையும் திருடி உள்ளது.  பாமர மக்களின் கடும் உழைப்பில் கிடைத்த ஊதியத்தை கொள்ளை அடிப்பதே பாஜக அரசின் கொள்கையாக உள்ளது.  அன்புள்ள மோடிஜி,  இதோடு போதும் போதும்” என பதிந்துள்ளார்.