ஆட்சியில் உள்ளோர் சீனாவின் பெயரைச் சொல்ல அஞ்சுகின்றனர் : காங்கிரஸ்

டில்லி

ந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனாவின் பெயரைச் சொல்லவும் ஆட்சியில் உள்ளவர்கள் அஞ்சுவதாகக் காங்கிரஸ் குறை கூறி உள்ளது.

நேற்று டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.  அப்போது அவர் தனது உரையில், ”இந்திய வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு முதல் உண்மையான கட்டுப்பாடு கோடுவரை இறையாண்மைக்குச் சவால் விட்டோருக்கு பதிலடி அளித்தனர்” எனச் சீனா, மற்றும் பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம், “நமது விரர்கலால் காங்கிரசை சேர்ந்த அனைவரும் பெருமை அடைந்துள்ளோம்.  130 கோடி இந்திய மக்கள் அனைவரும் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.  நமது வீரர்கள் சீனாவுக்கு ஒவ்வொரு தாக்குதளிலும்  பதிலடி அளித்தனர்.  எனவே நாம் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

ஆட்சியில் உள்ளோருக்கு தற்போது என்ன ஆயிற்று?  அவர்கள் ஏன் சீனாவின் பெயரைச் சொல்லக்கூட அஞ்சுகின்றனர்?  மக்கள் நமது நாட்டை காக்கவும் சீனா தனது வீரர்களைத் திரும்பப் பெறவும் என்ன நடவடிக்கை எடுத்தது என இந்த சுதந்திர தினத்தில் கேள்வி கேட்க வேண்டும்.  அதுவே ஜனநாயகத்தின் உண்மையான உணர்வு ஆகும்.

மத்திய அரசு நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை  விற்கிறது.  ரயில்வே, விமான நிலையம் உள்ளிட்டவற்றை தனியரிடம் அளிக்கிறது.  அத்துடன் எல் ஐ சி முதல் எஃப் சி ஐ வ்ரை அரசு  ஆதிக்கம் செலுத்தித் தாக்குதல் நடத்தி வருகிறது.   நாட்டின் சுதந்திரத்தை இந்த அரசு பாதுகாப்பாக  வைத்திருக்குமா?  அரசுக்கு மட்டுமின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரத்தைக் காப்பது கடமை ஆகும் “ எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் “இந்திய அரசு லடாக்கில் சீன ஆக்கிரமிப்பை கண்டிக்க பயப்படுகிறது.  சீனா அந்தப் பகுதியில் தன்னை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதற்கு ஆதாரமுள்ளது.  பிரதமரின் துணிச்சல் இன்மையும் ஊடகங்களின் மவுனமும் இந்தியாவை மிகப் பெரிய விலை அளிக்க வைக்கும்” எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.