சென்னை

ளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கை கட்டி பணி புரிவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு பின் தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறல்கள் குறித்து ஆளும் கட்சிகள் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் அவற்றின் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் கே எஸ் அழகிரி, “கடந்த 2016 ஆம் வருடம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ரூ. 650 கோடியை அதிமுக லஞ்சம் வழங்கி உள்ளது. அதற்கு வருமானவரித்துறையின் கடிதம் ஆதாரமாக உள்ளது. தற்போது பாஜக இந்த கடிதத்தை காட்டி மிரட்டி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

கூட்டணியில் உள்ள அதிமுக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு பாஜக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அதிமுகவுக்கு 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அந்த கட்சியால் மத்திய அரசின் ஒப்புதலை நீட் விலக்குக்கு பெற முடியவில்லை. இதற்கு காரணம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொம்மை போல இருந்ததே ஆகும்.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு கை கட்டி பணி புரிந்து வருகிறது. மத்திய அரசு எதிர்க்கட்சிகளை சோதனை என்னும் பெயரில் துன்புறுத்துகுகிறது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். காங்கிரஸ் மகக்ளவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகளுக்கு பின் ஜனநாயக முறையில் பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர். பாஜகவினர் ஜனநாயக முறையை கடைபிடித்தது கிடையாது.

தமிழகம் மற்றும் புதுவை அரசுகளை கேட்காமாலே மத்திய பாஜக அரசு மேதூது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை காண வராத மோடிக்கு உலகம் சுற்ற மட்டும் நேரம் இருக்கிறது,.

தனது கட்சியின் மூத்த தலைவர்களை மோடி அவமதித்து வருகிறார். அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.