காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய தொலைபேசி மூலம் ‘ஓட்டுப்பதிவு’…

 

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் பாலாசாப் தோரட், பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த மாநிலத்துக்கு புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய தொலைபேசி மூலம் ‘ஓட்டெடுப்பு’ நடத்த டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

பாலாசாப் தோரட்

இந்த தொலைபேசி ஓட்டெடுப்பு எப்படி நடைபெறும்?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தொழில்நுட்ப பிரிவு, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஆயிரம் காங்கிரஸ் உறுப்பினர்களை தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் இந்த உறுப்பினர்களிடம், “புதிய காங்கிரஸ் தலைவரை நியமிக்க மூன்று பேரின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறு” அவர்கள் கேட்பார்கள்.

அவர்கள் சொல்லும் மூன்று பேர் பெயரை, தொழில் நுட்ப பிரிவு குறித்துக்கொள்ளும்.

பெரும்பாலான உறுப்பினர்கள் ஓட்டளித்த நபர், புதிய தலைவராக கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்படுவார்.

– பா. பாரதி