டெல்லி: பொருளாதாரம், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள், கொள்கைகளை பரிசீலிக்க 3 குழுக்களை காங்கிரஸ் அமைத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வெளியிட்டு உள்ளார். பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளை கையாள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே, திக் விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வெளியுறவு தொடர்பான பிரச்னைகளை பற்றி விவாதிக்க அமைக்கப்பட்டு உள்ள குழுடிவல் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். சல்மான் குர்ஷித் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், மன்மோகன் சிங், ஆனந்த சர்மா, சசிதரூர், சப்தகிரி உலாகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள், கொள்கைகளை பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் வின்சென்ட் பாலா ஒருங்கிணைப்பாளராக இருப்பார். அவருடன், மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, வி. வைத்திலிங்கம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.