ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு மோடி அடிபணிந்து விட்டார்….காங்கிரஸ் தாக்கு

டில்லி:

ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணைய் 25 சதவீதம் அளவுக்கு ஜூன் மாதத்தில் குறைந்து விட்டது என்றும், கப்பலில் ஏற்றப்பட்ட பேரல்கள் இந்த மாதம் வந்து சேரும் என்றும் மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் மத்திய அரசின் இச்செயலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘- ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதியை குறைத்ததன் மூலம், பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கை குழப்பமானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.

உள்நாட்டில் எண்ணைய் விலையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவின் நலனைவிட அமெரிக்காவின் நலனுக்கே மீண்டும் முன்னுரிமை அளித்துள்ளார். ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதியை குறைத்திருப்பது ஏழை மக்களை நெருக்கும். விநியோகம் பாதித்து எண்ணைய் விலை ஏற்றத்தை அதிகரிக்கும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கும்

ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதியை குறைத்ததன் மூலம் பிரதமர் மோடி காகிதப்புலி என்பது தெளிவாக காட்டுகிறது. அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மோடி அடிபணிந்து விட்டார்”என்றார்.