சிசிடிவி டெண்டரில் ஊழல்…கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் முடிவு

டில்லி:

பெண்களின் பாதுகாப்பு கருதி டில்லியில் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இத்திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த ஊழலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. டில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தலமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரசார் பெரும் திரளாக கலந்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு பொய் என்றால் அரவிந்த் கெஜ்ரிவால் மான நஷ்ட வழக்கு தொடரலாம் என்று காங்கிரசார் சவால் விடுத்துள்ளனர்.