காங்கிரஸ் தோல்வி தெரிந்ததே – பாஜக நிலை என்ன? : கமல்நாத் கேள்வி

டில்லி

டில்லி பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி தெரிந்து தான் ஆனால் பாஜக சவால் விட்டது என்ன ஆனது என மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று காலை முதல் டில்லி சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.  ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.   ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றியைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், “டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிந்தது தான். ஆனால்  பாஜக ஆரம்பம் முதலே டில்லியில் மிகப் பிரமாண்ட வெற்றி அடையும் எனவும் ஆட்சியைப் பிடிப்போம் எனவும் சவால் விட்டது.

ஆனால் தற்போது டில்லி சட்டப்பேரவையில் பாஜக அட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே பாஜகவின் நிலை என்ன ஆகி உள்ளது என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாக இருக்கும்: எனத் தெரிவித்துள்ளார்.

You may have missed