போபால்

த்தியப் பிரதேச அரசால் வெளிநாடு அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் பாஜக தலவர்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் என காங் குற்றம் சாட்டி உள்ளது/

மத்தியப் பிரதேச அரசு அம்மாநில விவசாயிகளுக்கு  நவீன விவசாய தொழில்நுட்பங்களை அறிந்துக் கொள்வதற்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்து வருகிறது.    கடந்த 2013ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ஸ்பெயின், பிரான்ஸ், நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில், மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுக்கு விவசாயிகள் அனுப்பப்பட உள்ளனர்.   ஒவ்வொரு குழுவிலும் 20 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு 50 % முதல் 90 %  அரசு பயணப்படி வழங்குகிறது.    இந்த குழுவில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள விவசாயிகள் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது சந்தேகத்தை தெரிவித்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜய் துபே”இந்தக் குழுவில் பெரும்பாலும் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள்,  பாஜக நிர்வாகிகள், அவர்களின் பிரதிநிதிகள் மட்டுமே உள்ளனர்.   இவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் விவசாயிகள் பெயரில் பாஜகவினர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்கின்றனர்”  எனக் கூறி உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில விவசாயத்துறை அமைச்சர் கௌரிசங்கர், “விவசாய சங்கத்தலைவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் இவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.  விவசாயம் செய்பவர்கள் எல்லோருமே விவசாயிகள் தான்.  விவசாயிகளில் 70% பேர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள்.   அதனால் அதில் அதிக அளவில் பாஜகவினர் இருப்பதில் வியப்பில்லை”  எனக் கூறி உள்ளார்.