கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஜோதித்ராதித்ய சிந்தியாவை நீக்கிய காங்கிரஸ் – முழு விவரம்

டில்லி

ட்சி விரோத நடவடிக்கை காரணமாக ஜோதித்ராதித்ய சிந்தியாவைக் கட்சியை விட்டு விலக்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர்.  காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.   இம்மாநில ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயலுவதாகப் பலமுறை காங்கிரஸ் கூறி உள்ளது.

முதல்வராக கமல்நாத் நியமிக்கப்பட்டதில் இருந்தே ஜோதித்ராதித்ய சிந்தியா மனக்கசப்புடன் இருந்ததாக தகவல்கள் வந்தன.  சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பாஜக ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயல்வதாகத் தெரிவித்தார்.  அதை பாஜக மறுத்தது.

ஜோதித்ராதித்ய சிந்தியாவின் ஆதரவால்ர்கல் எனக் கூறப்படும் 17 காங்கிரஸ் உறுப்பினர்கள் பெங்களூருவில் ஒரு விடுதியில் பாஜகவினரால் தங்கை வைக்கபடுள்ளதாக தகவல்கள் வந்தன.    ஜோதித்ராதித்ய சிந்தியாவைத் திருப்திப் படுத்த காங்கிரஸ் தலைமை சில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து அந்த பதவிகளை சிந்தியா ஆதரவாளர்களுக்கு வழங்க உள்ளதாகக் கூறப்பட்டது

நேற்று இரவு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கமல்நாத் கூறியதை ஏற்று 20 அமைச்சர்கள்  ராஜினாமா செய்துள்ளனர்.  ஆனால் ஜோதித்ராதித்ய சிந்தியா இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஜோதித்ராதித்ய சிந்தியாவைக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்துள்ளார்