மத்திய பிரதேசம் : காங்கிரஸ் ஆட்சி அமைக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆதரவு

போபால்

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்துள்ளது.

இழுபறியாக இருந்த மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள், பாஜகவுக்கு 109 இடங்கள் கிடைத்துள்ளன. இது தவிர சுயேச்சைகள் 4, பகுஜன் சமாஜ் கட்சி 2 மற்றும் சமாஜ்வாதி கட்சி 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மட்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு 116 இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தங்கள் கட்சி காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என அறிவித்துள்ளார். அத்துடன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் தனது கட்சியும் காங்கிரஸ் ஆதரவு அளிக்க ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தவிர சுயேச்சை உறுப்பினர் 4 பேரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். ஆகவே மொத்தம் காங்கிரசுக்கு 114+2+1+4 என 121 பேர் ஆதரவு கிடைத்துள்ளது. அதை ஒட்டி மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி ஆகி உள்ளது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ராஜினாமாவை மத்தியப் பிரதேச ஆளுநரிடம் அளித்துள்ளார்.

விரைவில் காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர உள்ளது.