பெங்களூர் மாநகராட்சி மேயராக காங்.கட்சியை சேர்ந்த கங்காம்பிகே  தேர்வு

--

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க  காங்கிரஸ் கட்சியில்  2 பெண்கள் இடையே கடும் போட்டி நடைபெற்று வந்த நிலையில், மேயராக  கங்காம்பிகே  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய  பெங்களூரு மாநகராட்சிமேயராக பதவி வகிப்பவர் சம்பத்ராஜ் பதவி வகித்து வருகிறது. இவரது பதவிக்காலம் வருகிற 27-ந் தேதி நிறைவடைந்தது. அதன் காரணமாக இன்று அங்கு மேயர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகே  மேயராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு பெங்களூர் மேயர் பதவி  பொதுப்பிரிவு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு  இருந்தது. ஜே.டி.எஸ். மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் மாநகராட்சியில் அதிகாரத்தை பிடித்து காங்கிரஸ் கட்சி மேயர் பதவிக்கு தகுதியான பெண் நபரை தேர்வு செய்ய முயற்சி மேற்கொண்டபோது, 2 பெண்கள் மேயர் பதவியை பிடிக்க களமிறங்கினர்.

சாந்தி நகர் வார்டு உறுப்பினர் சவுமியா சிவக்குமார், ஜெயநகர் வார்டு உறுப்பினர் கங்காம்பிகே ஆகிய இருவரும் மேயர் பதவியை கைப்பற்ற  கடுமையான முயற்சியில் இறங்ககினர். அவர்களுக்கு  இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மேலிடம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து போட்டியில் இருந்து சவுமியா சிவக்குமார் விலகிக் கொண்டார். அதன் காரணமாக கங்காம்பிகே  மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

துணைமேயராக ஜனதாதள கட்சியை சேர்ந்த  ரமிலா உமாசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் மாநகராட்சி மேயராக பதவி ஏற்க உள்ள  கங்காம்பிகே லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறப்படு கிறது. காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அகில பாரத வீரசைவ மகாசபையின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஷாம்னூர் சிவசங்கரப்பா அழுத்தம் கொடுத்ததின் பேரில்  கங்காம்பிகே மேயராக தேர்வு பட்டிருப்பதாக கூறப்படுகிறது.