எம் எல் ஏ க்களின் போலி கையெழுத்தை அளித்த கர்நாடக காங்கிரஸ் : மத்திய அமைச்சர்

பெங்களூரு

வர்னரிடம் அளித்த கடிதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரின் போலி கையெழுத்தை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

கர்நாடகாவில் அரசு அமைக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதசர்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.  அதில் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை இணைத்திருந்தனர்.  ஆயினும் ஆளுநர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.    எடியூரப்பா முதல்வராக பதவி எற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “கவர்னருக்கு அளித்த கடிதத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் பலருடைய கையெழுத்து போலியானது ஆகும்.   காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூரு வரும் முன்பே அவர்களுடைய கையெழுத்துக்களை காங்கிரஸ் அளித்தது எவ்வாறு என புரியவில்லை.  ஆனால் போலியாக கையெழுத்தையும் ஆவணங்களையும் உருவாக்குவது காங்கிரஸுக்கு புதிதில்லை” என கூறி உள்ளார்.