திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

 

வரும் 6 ஆம் தேதி கேரள மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட், பாஜக என மூன்று அணிகள் களத்தில் உள்ளன.   அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அவ்வகையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வரும் 30 மற்றும் 31 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.  அப்போது அவர் பல பிரசாரக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

 

முதல் கட்டமாக 30 ஆம் தேதி அன்று பிரியங்கா 30 ஆம் தேதி அன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளியில் காலை 11.50 மணிக் கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.  அதன் பிறகு கொல்லம் நகரில் பகல் 1.25 மணிக் கூட்டத்திலும் அதே மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரா பகுதியில் பகல் 2.25 மணிக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

பிறகு மாலை 3.35 மணிக்குத் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வெஞ்சாரமூடு பகுதியில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.   பிறகு மாலை 4.40 மணிக்கும் கட்டகாடா பகுதிக் கூட்டத்திலும் மாலை 5.30 மணிக்குத் திருவனந்தபுரம் வலியதுறையில் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்கிறார்.