பிடிபி கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் அவசியம் இல்லை : காங்கிரஸ்

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பிடிபி கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் இந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்த கூட்டம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,  அம்பிகா சோனி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.    கூட்டத்தின் முடிவில் குலாம் நபி ஆசாத் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.

அப்போது குலாம் நபி ஆசாத், “காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி  கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது.    அப்படி ஒரு அவசியம் காங்கிரஸுக்கு இல்லை.    அதனால் அத்தகைய ஊகங்களுக்கு வாய்ப்பே இல்லை” என ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி கட்சிக்கு அதிக உறுப்பினர்களாக 28 பேர் உள்ளனர்.   பாஜகவுக்கு 25 பேர், தேசியவாத காங்கிரஸுக்கு 15 பேர் மற்றும் காங்கிரஸுக்கு 12 உறுப்பினர்கள் உள்ளனர்.   எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாதது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Congress have no necessity to join with PDP and form a govt in kashmir ; Ghulam nabi azad
-=-