2019 லோக்சபா தேர்தல்: கர்நாடக காங்கிரஸ் ஆலோசனை

பெங்களூரு:

2019ம் ஆண்டு நடைபெற உள்ள  லோக் சபா தேர்தல் குறித்து  கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் கள் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த வொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 79  இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், குறைந்த இடங்களை பெற்ற  ஜேஎடிஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது.

கூட்டணி ஆட்சியின் முதல்வராக ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரும் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த பரமேஸ்வர் துணைமுதல்வராக பதவி எற்ற காரணத்தினால், மாநில காங்கிரஸ் தலைவராக,   கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல்வர் குண்டுராவின் மகனான  தினேஷ் குண்டுராவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்தது. அதுபோல செயல்தலைவராக ஈஸ்வர் கந்த்ரேவையும் நியமித்தது. இருவரும் நாளை பதவி ஏற்க உள்ளார்கள்.

இந்த நிலையில் இன்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.   இந்த கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, தற்போதைய துணை முதல்வரும், முன்னாள் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரு மான பரமேஸ்வர் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கர்நாடக மாநில கூட்டணி அரசு பதவி ஏற்றபிறகு, கர்நாடக மாநில  காங்கிரஸ் கூட்டம் இன்று முதன்முறையாக  நடைபெறுகிறது.

இந்த  கூட்டத்தில், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில்  ‘இனவாத சக்திகளை’ தோற்கடிக்கும் வகையில் வியூகம் வகுப்பது  குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற  தேர்தலில் பெற்ற தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில், தேர்தலில் தோல்வியுற்றதற் கான காரணங்களைத் தெரிந்துகொள்ளவும் எதிர்காலத்திற்கான கட்சியை பலப்படுத்தவும் வேட்பாளர்களுடன் விவாதங்கள் நடத்தி வருகிறது.

கூட்டத்தில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, வரவிருக்கும் மக்களவைத் தேர்தல்களுக்கு நாம் புதிய வீரியத்துடன் போராட வேண்டும், வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

மேலும், நாம்  ஜே.டி. (எஸ்) உடன் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம் அதை சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் குறித்து   கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சில விவகாரங்களை எழுப்பியுள்ளனர் அதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழுவில் விவாதித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கூட்டத்தில் பேசிய சிலர் தங்களது தோல்விக்கு நமது கட்சியை சேர்ந்த வர்களே காரணம் என்றும் குற்றம் சாட்டினர். மாநிலதலைமை தங்களது புகார் குறித்து சரியான நடவடிக்கை எடுக்காததே தோல்வி காரணம் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக   சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த வர்கள், அந்த தொகுதிகளிக்கு சென்று, தொகுதியில் அபிவிருத்தி வேலைகளை தொடரவும், காங்கிரஸ் கரத்தை வலுப்படுத்த வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், வர இருக்கும் லோக் சபா தேர்தலில் இனவாத சக்திகளை தோற்டிகடித்து காங்கிரஸ் அமோக வெற்றி வேண்டும் என்றும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று  ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு  லோக்சபா தேர்தலிலும் ஜேடிஎஸ் கட்சியுடனான கூட்டணி  தொடரும் வாய்ப்பு குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.