இந்திரா காந்தி நினைவுநாள்: சோனியா காந்தி, மன்மோகன் உள்பட தலைவர்கள் அஞ்சலி

டில்லி,

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் இருப்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர் இந்திராகாந்தி. அவரது 35வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி புதுடெல்லியில் ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பஜனை பாடல்களும் பாடப்பட்டன. இன்று காலை அங்கு வந்த காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

You may have missed