2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக.வை காங்கிரஸ் வீழ்த்தும்….ராகுல்காந்தி

மனாமா:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக ராகுல்காந்தி வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பக்ரைன் சென்றவருக்கு அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு மன்னர் குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி உரையாடினார். பின்னர் அங்கு நடந்த இந்திய வம்சாவளி மக்களுக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஒரு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசுகையில், ‘‘இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். மீன்வளத் துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாவதை காங்கிரஸ் உறுதி கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிந்தனைகள் பாதுகாப்பானதாக இல்லை. பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான புள்ளி விபரங்களில் உண்மை தன்மை இல்லை.

2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக.வை வீழ்த்தும் சக்தி காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. உண்மைகளை கொண்டு பொய் பிரச்சாரங்கள் அடித்து நொறுக்கப்படும். நாங்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு நாட்டை வடிவமைத்தோம்.

ஆனால், தற்போது பாஜக ஆட்சி நடத்துகிறது. அவர்களை வெற்றி பெற 2019ல் நாங்கள் மேலும் வலுபெற வேண்டும். ஆங்கிலேயேரை தோற்கடித்து இந்தியாவை நிர்மானித்தோம். அதேபோல் பாஜக.வை வீழ்த்துவது எப்படி எப்பது எங்களுக்கு தெரியும்’’ என்றார்.