குஷ்பு விலகலால் காங்கிரசுக்கு இழப்பு இல்லை : கே எஸ் அழகிரி

சென்னை

டிகை குஷ்பு விலகியதால் காங்கிரசுக்கு எவ்வித இழப்பும் இல்லை என கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.

பிரபல நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருந்தார்.

அவர் இன்று காங்கிரஸில் இருந்து விலகி ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

அவர் சில காலம் முன்பு கூட பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்ததால் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தனது டிவிட்டரில்,

குஷ்பு காங்கிரஸ் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை.

குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார்.

@khushsundar   கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை.”

என பதிந்துள்ளார்.