கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : குமாரசாமி

ங்களூரு

ர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மஜத – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.

கர்நாடகாவில் ஜனதா தரிசனம் என்னும் மக்கள் குறை கேட்கும் நிக்ழ்ச்சி நேற்று மங்களூருவில் நடந்தது. அதில் முதல்வர் குமாரசாமி கலந்துக் கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் கிராமத்தில் ஒருநாள் தங்கும் திட்டம் தொடக்க விழாவில் முதல்வர் கலந்துக் கொண்டார். அங்கு அவர் சிறப்புரை ஆற்றினார்.


குமாரசாமி தனது உரையில், “அடுத்தபடியாக நான் குடகு மாவட்டம் சென்று மக்கள் குறைகளை கேட்க உள்ளேன். நான் செல்லும் இடம் எல்லாம் மஜத தொண்டர்களுடன் காங்கிரஸ் தொண்டர்களும் எனக்கு வரவேற்பு அளிக்கின்றனர். பலரும் கூறுவது போல் கூட்டணி அட்சி கவிழாது. காங்கிரஸ் கட்சி எனக்கு 5 ஆண்டுக்ள் முழு ஒத்துழைப்பை அளிக்கும்.

இனி வர உள்ள கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மஜத் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த இடைத் தேர்த்லில் சிவமொக்கா தொகுதியை காங்கிரஸ் மஜதவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது.” என தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி