Random image

பாஜக எம் எல் ஏ நாக்கை வெட்டினால் ரூ. 5 லட்சம் பரிசு : காங்கிரஸ் தலைவர்

மும்பை

பெண்களை கடத்தப் போவதாக கூறிய பாஜக எம் எல் ஏ ராம் கதத்தின் நாக்கை வெட்டி கொண்டு வருவோருகு ரூ. 5 லட்சம் பரிசளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த உறியடி விழாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராம்கதம் “தொண்டர்கள் விரும்பும் பெண்ணை கடத்தி வந்து அவர்களுக்கு காதல் திருமணம் செய்ய தாம் தயாராக உள்ளதாக பேசினார்.  அது நாடெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.   ராம்கதம் தாம் பேசியதை சிலர் திரித்து வெளியிட்டதாக தெரிவித்தார்.

ஆயினும் அவரை எதிர்த்து பல மகளிர் அமைப்புக்கள் போராட்டம் நடத்தின.   அவருடைய பேச்சு குறித்து விளக்கம் அளிக்கக் கோரி மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டிஸ் அனுப்பியது.  மாநிலம் எங்கும் அவருடைய போஸ்டர்களை செருப்பால் அடித்து மகளிர் போராட்டம் நடத்தினர்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுபத் சவ்ஜி, “பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராம் கதம் பெண்களை கடத்துவேன் என சொன்னதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.  பெண்கள் மனதை புண்படுத்தும் ப்டி பேசிய ராம் கதமின் நாக்கை வெட்டி கொண்டு வருவோருக்கு நான் ரூ.5 லட்சம் பரிசு வழங்குகிறேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.