கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது சில்மிஷம்: இளைஞரை சரமாரியாக தாக்கிய குஷ்பு (வீடியோ)

பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடக மாநிலம் சென்றுள்ள நடிகை குஷ்புவிடம் சில்மிஷம் செய்ய முயற்சித்த வாலிபரை, அவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அகில இந்திய  காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார் நடிகை குஷ்பு. இவர் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்த குஷ்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபடாமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் அங்கு பிரசாரத்திற்கு சென்றிருந்தார்.

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக ஹொய்சாலா நகருக்கு நடிகை குஷ்பு வந்திருந்தார்.  அவருக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப் பட்டது. குஷ்புவை காண ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இளைஞர் ஒருவர் குஷ்புமீது கைவைக்க முயற்சி செய்தாக தெரிகிறது.

இதனால் கடும் கோபமடைந்த குஷ்பு, பின்னால் வந்த இளைஞரின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறையினர் அந்த இளைஞரை அங்கிருந்து அகற்றினர்.

அதன் பின்னர் குஷ்பு  பிரசாரத்திற்கு சென்றார்.