பட்டினி சாவுகளை தடுக்கும் நூறு நாள் வேலை திட்டத்தை மோடி அரசு புறக்கணிப்பு….ப.சிதம்பரம்

டில்லி:

நூறு நாள் வேலை திட்டத்தையும், உணவு பாதுகாப்பு சட்டத்தையும் மோடி அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த இரு திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்தி பட்டினிச் சாவுக்கு வழிவகுக்ப்படுகிறது. டில்லியில் 3 சிறுமிகள் பட்டினிச் சாவு அடைந்ததற்கு இது போன்ற செயல்பாடு தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்பது பசிக்கு முடிவு கட்டும் வகையில் கொண்டு வரப்பட்டது. அதேபோல் பட்டினிக்கு முடிவு கட்டும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது இரண்டையுமே மோடி அரசு புறக்கணித்துள்ளது. டில்லியில் 3 சிறுமிகள் பட்டியால் இறந்த சம்பவம் தலை குணிவை ஏற்படுத்தியுள்ளது.’’ என்று தெரிவித்துள்ளார். கிழக்கு டில்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் கடந்த 24ம் தேதி இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.