திருக்குறளின் ஆழம் திகைக்க வைக்கிறது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: திருக்குறளின் ஆழம் திகைக்க வைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் தேசிய தலைவர்கள் தமிழ் மொழி, அதன் பழமை, தமிழ் மொழி இலக்கியம் குறித்து பேசி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தமிழ் குறித்து பேசிவிட்டு போவது வழக்கமான ஒன்றாகும்.

இந் நிலையில், திருக்குறளின் ஆழம் தம்மை திகைக்க வைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: திருக்குறளை படித்து வருகிறேன். அதன் ஆழம் என்னை திகைக்க வைக்கிறது. குறள்களை கேட்க, கேட்க, உங்கள் காதுகள் புரிந்துகொள்ளும் என்று பதிவிட்டுள்ளார்.