காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி….

டெல்லி:

கில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி இன்று இரவு திடீரென டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் காங்கிரசாரிடையே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர்   வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து  கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா கூறியிருப்பதாவது,

சோனியாகாந்தி  வழக்கமான சோதனைகளுக்காகவே அ அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.

சோனியா காந்தி  இன்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் இன்று பங்கேற்றார். 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார். இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி