புதுச்சேரி: மாநில அரசுக்கு எதிராக மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி பிரசாரப் பயணம் கூட்டத் தொடங்கியது.

‘புதுச்சேரியை காப்போம் மீட்போம், மோடியே திரும்பப்பெறு கிரண்பேடியை, சர்வாதிகாரி கிரண்பேடியே திரும்பி போ’ ஆகிய கோ‌‌ஷத்துடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பிரசார பயண கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பெரியகாலாபேப்டடை பகுதிகிய்ல நடைபெற்ற பிரசாரப்பயணக் கூட்டத்துக்கு  புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.  மாநில முதல்வர்  நாராயணசாமி பிரசார கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அபபோது, புதுவை மாநில மக்களுக்கு துரோகியாகவும், விரோதியாகவும் செயல்படும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து வருகிற 8-ந் தேதி காலை 9 மணி முதல் கவர்னர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கிரண்பேடிக்கு மாநில வளர்ச்சி மீது அவருக்கு அக்கறை கிடையாது என்று கூறியவர் மாநிலஅரசின் மக்கள் நலத்ததிட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார். வெகுஜன விரோதியாக உள்ளார். இபடிப்பட்ட கவர்னர் புதுவை மாநிலத்திற்கு தேவையா? என்று கூறியவர், கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இந்த கூட்டத்தில்,  அமைச்சர்கள் கந்தசாமி, ‌ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், ரா‌‌ஷ்டீரிய ஜனதா தளம் சஞ்சீவி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.