மேகாலயாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

ஷில்லாங்:

மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும் சூழல் நிலவுகிறது.

Congress

மேகாலயாவில் பிப்ரவரியில் தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளை கைப்பற்றி தனிபெரும் கட்சியாக விளங்கியது. தேசிய மக்கள் கட்சி 19, சுயேட்சைகள் 2 பேர் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக கான்ராட் சங்மா பதவி ஏற்றார்.

இந்நிலையில் காங்கிரஸைய சேர்ந்த டாங்கோ எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்து கடித்ததை துணை சபாநாயகர் டிமோதி டி.ஷிரா வுக்கு அனுப்பியுள்ளார். இதை உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கே.சங்கமா உறுதிபடுத்தியுள்ளார்.