கேரள வெள்ளம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி.க்கள் ஒருமாத சம்பளம் நிவாரண நிதி

சென்னை:

ழை வெள்ளத்தால் கோரமாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக காங். எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

கேரளாவில் புரட்டி எடுத்த பேய் மழை மற்றும் வெள்ளம் க காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தும், பல இடங்களில் சாலைகள் அரிக்கப்பட்டு, வீடுகள்,  உடை மற்றும் உணவுக்கும் வழியின்றி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு மத்திய அரசு மட்டுமல்லாத மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், திரையுலகி னர், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நிவாரணம் வழங்கி வருகின்றனர். உலகெங்கிலும் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பவளத்தை வழங்கு வதாக அறிவித்திருந்தனர். அதுபோல இன்று  திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரணத்துக்கு வழங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

மேலும், கால்வாய்களை தூர்வார ரூ.4000 கோடி செலவு செய்ததை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்  என்றும்,  கேரள வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று  திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

மார்க்சிய கம்யூ. 20 லட்சம் நிவாரணம்

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. தமிழ் மாநிலக்குழு சார்பில் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.