டெல்லி: வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம், ஜனநாயக படுகொலைக்கு சமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான அகமது படேல் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா, இன்று மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது. ஜனநாயக படுகொலைக்கு சமம்.

மாநிலங்களவை துணை தலைவரின் செயல்பாடுகள் ஜனநாயக மரபுகளுக்கும், நடைமுறைகளுக்கும் தீங்கு ஏற்படுத்தி உள்ளது. ஆகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். பின்னர் 12 எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன.