பத்திரிக்கையாளர் அர்னாப் மீது மான நஷ்ட வழக்கு!! எம்.பி சசிதரூர் தொடர்ந்தார்

டெல்லி:

பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வமி சார்பில் ரிபப்ளிக் டிவி தொடங்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விவாகதங்கள் நடந்தது.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வமி மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிதரூர் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். 151 பக்கங்கள் கொண்ட அந்த வழக்கில் ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும், அவர் போலீஸ் விசாரணை முடியும் வரை அவரது மனைவி சுனந்தா புரஷ்கர் மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

‘‘முறையான விசாரணையின்றி, ஒழுக்கமற்ற மற்றும் ஊதுகுழல் இதழியலை மேற்கொண்டு தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அர்னாப் செயல்படுவதாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள. இதேபோன்ற செயலை டைம்ஸ் நவ் டிவி.யில் செய்தார். தற்போது ரிபப்ளிக் டிவியிலும் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி.யில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியை மொத்தமாக எழுத்து வடிவில் தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த துயரத்தை பெரிய அளவில் வெளிப்படுத்திவிட்டனர் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

அர்னாப் இதற்கு முன்பு வேலை செய்த டைம்ஸ் நவ் டிவி நிர்வாகம் இவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது. காப்புரிமையை மீறியதாகவும், திருடியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவியில் ஒளிபரப்பான லாலு&முன்னாள் எம்பி சகாபுதீன் உரையாடல், சுனந்தா புரஷ்கர் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் டைம்ஸ் நவ் டிவியில் பணியாற்றியபோது பதிவு செய்யப்பட்டது என்று அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடரப்பட்டு ஒரு வார காலத்தில் தற்போது சசிதரூரும் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.