காங்கிரஸ்  எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.

சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான வசந்தகுமார்,  தனது தொகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சேவையாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கும், அவரது மனைவிக்கும்  கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இருவருக்கும்  தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் , நாகை மக்களவைத் தொகுதி எம்.பி. செல்வராசு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி எம்.பி. ராமலிங்கம் ஆகிய எம்.பி.க்களும் கொரோனா தொற்று பாதிக்கப்படிருந்தது.

அதுபோல தமிழகத்தில் இதுவரை 31  எம்எல்ஏக்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி