கொரோனா : காங்கிரஸ் எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

சென்னை

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரபல தொழிலதிபரும் வசந்த் அண்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் ஆவார்.

இவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் விரைவில் மீண்டு வர வேண்டும் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.