கேரளா வெள்ள நிவாரண நிதி….காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்

டில்லி:

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. இதனால் மாநிலத்தில் பரவலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

congress

இதன் மூலம் 324 பேர் இறந்துள்ளனர். 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ரெயில், சாலை, விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. பல மாநில முதல்வர்கள் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரளா வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.