டெல்லி:

க்களவை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், 303 இடங்களை பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களை பிடித்துள்ளது.

மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. அதைத்தொடர்ந்து பாராளுமன்ற அவை விரைவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.பிக்கள் கூட்டம்  நாளை மறுநாள் டெல்லியில் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்ற  52 புதிய எம்.பி.க்களும் கலந்து கொள்கின்றனர்.  இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவரை புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யவுள்ளனர்.

மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி ஏற்க தயார் என சசிதரூர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.