மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 இடங்களில் போட்டியிடும்! சரத்பவார்

மும்பை:

காராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு செய்துள்ளது. அதன்படி, இரு கட்சிகளுக்கும்  தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டு உள்ளது. அதே வேளையில் தற்போது ஆட்சி செய்து வரும் பாஜக சிவசேனை இடையே கூட்டணி தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தனித்து போட்டியிடும் மன நிலையில், சிவசேனா கட்சி உள்ளது.

இந்த நிலையில்,டில்லியில்  காங். தலைவர் சோனியாவை  சரத்பவார் சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில், தொகுதிப்பங்கீடு இறுதியானது.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார்,  மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் நாட்டின், பெரிய பழைய கட்சிக்கும் அவரது 20 ஆண்டுகால அமைப்புக்கும் இடையில் இருக்கை பகிர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள தாகவும்  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளார். மீதமுள்ள 38 தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப் படும் என்றும் தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் என்சிபி “புதிய முகங்களுக்கு” வாய்ப்பளிக்கும் என்றும் கூறினார்.