”தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ திரைப்படத்திற்கு எந்த எதிர்ப்பும், தடையும் இல்லை ”- காங்கிரஸ்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ திரைப்படத்திற்கு காங்கிரஸ் சார்பில் எந்த எதிர்ப்பும், தடையும் கிடையாது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Accidental

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்ததை மையமாகக் கொண்டு ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியது.

இதனை தொடர்ந்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை டிவிட்டரில் பகிர்ந்த பாஜக, “ ஒரு குடும்பம் இந்த நாட்டை எப்படி 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது என்பதைப் பாருங்கள்,” என குறிப்பிட்டுள்ளது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் இத்திரைப்படத்திற்கு மத்தியப்பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

manmogan

இதற்கு மறுப்பு தெரிவித்து காங்கிரஸ் பதிலளித்துள்ளது.மேலும், ”இந்த படம் குறித்து விவாதிக்க கூட நாங்கள் விரும்பவில்லை. அதற்கு எதிராக போராட்டம் நடத்தி படத்திற்கு தேவையில்லாத விளம்பரத்தை கொடுக்க நாங்கள் தராயாக இல்லை” என மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் மீடியா பிரிவு தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ படத்திற்கு தடை விதிக்கப்படும் எனற தகவல் பொய்யானது, மத்திய பிரதேச அரசு அதுப்போன்ற நடவடிக்கையை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கிடையே இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.